1000ஆவது குடமுழுக்கு விழா கோலாகலம்: முதல்வர் பெருமிதம்!

தமிழகம்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரமாவது குடமுழுக்கு விழா மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று (செப்டம்பர் 10) விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று திமுக அரசு பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நடைபெறும் 1,000 –வது குடமுழுக்கு விழா மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குடமுழுக்கு விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டு விழாவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதில் கௌமார மடம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவநெறிச் செம்மல் கே.பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவருக்கும் 1000வது குடமுழுக்கு நினைவு பரிசை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

“எல்லார்க்கும் எல்லாம்” – முதல்வர்

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “எல்லார்க்கும் எல்லாம்” என்ற #DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

ரூபாய் 5000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.

இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இதற்குக் காரணமான அமைச்சர் சேகர்பாபுவையும் – அதிகாரிகளையும் – அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து இன்றுவரை 857 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 1000ஆவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ் சினிமா: ஒழுக்கம் தவறும் பெரிய படங்கள்… புற்றீசலாய் சாகும் சிறுபடங்கள்!

காந்தி நினைவிடத்தில் உலக தலைவர்கள் மரியாதை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “1000ஆவது குடமுழுக்கு விழா கோலாகலம்: முதல்வர் பெருமிதம்!

  1. I think he forgot his son’s statement, or as usual make T.N.Public fool, public know very well about DMK.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *