விடியல் அரசா? ‘இடி’ அரசா? மின்கட்டண உயர்வு பற்றி டிடிவிதினகரன்

தமிழகம்

தமிழக அரசு உயர்த்தியிருக்கும் மின்கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் டிடிவி.தினகரன், அதை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (ஜூலை 18) சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறைரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அரசு மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 18) பதிவிட்டிருக்கும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மின்கட்டண உயர்வு என்ற அடுத்த பரிசை வழங்கியிருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாக சொன்னவர்களின் ஒவ்வோர் அறிவிப்பும் மக்களின் தலையில் இடியாகவே விழுந்துகொண்டிருக்கிறது.

மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? ஏற்கனவே, நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.

  • ஜெ.பிரகாஷ்
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *