பேருந்து, ரயில், மெட்ரோ பயணத்துக்கு ஒரே சீட்டு: புதிய ஏற்பாடு!

தமிழகம்

சென்னையில் ஒரே பயணச்சீட்டில் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (நவம்பர் 17) நடைபெற உள்ளது.

1 கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் சென்னை மாநகரில் போக்குவரத்து வசதிகள் என்பது இன்றியமையாதது.

நாள்தோறும் லட்சக்கணக்கானோர் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் போன்றவற்றின் வாயிலாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர்.

பொதுமக்களின் வசதிக்காக இந்த மூன்று போக்குவரத்து துறை சார்பிலும் மாதாந்திர பயணசீட்டுகள் தனி தனியே வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் , புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற உள்ளது.

கூட்டத்தில், பலவகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் 2020-21ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாளொன்றுக்கு 11.32 லட்சம் பேர் பயணித்தனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து 2021- 22ஆம் ஆண்டு காலகட்டத்தில் 28.70லட்சம் பேர் பயணித்தனர், இந்த எண்ணிக்கையும் அதிகரித்து இந்த ஆண்டு அக்டோபர் வரை 29.35 பேர் பயணித்தனர் என்று சென்னை போக்குவரத்து இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று கடந்த அக்டோபரில் 61.56 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதுபோன்று புறநகர் ரயில்களிலும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.

இவ்வாறு பயணிக்கும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஒரே பயணச்சீட்டில் 3 போக்குவரத்து சேவையையும் கொண்டு வர முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கால்பந்து உலகக்கோப்பை : வரலாற்று பெருமையில் நனையும் கத்தார்!

பிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *