வாடிய பயிர்கள்… விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு!

தமிழகம்

டெல்டா மாவட்டங்களில்‌ குறுவை பயிர்‌ சாகுபடியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்‌ தொகை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 5)உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில்‌ டெல்டா மாவட்ட விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌  12-6-2023 அன்று மேட்டூர்‌ அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்து வைத்தார்.

ஆனால்‌, காவிரி ஆற்றில்‌ கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர்‌ தொடர்ந்து பெறப்படாத காரணத்தால்‌, மேட்டூர்‌ அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர்‌ திறந்து விட இயலாத நிலையில்‌, தற்போது டெல்டா மாவட்டங்களில்‌ ஏறத்தாழ 40 ஆயிரம்‌ ஏக்கர்‌
பரப்பில்‌ பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள்‌ வாடிய நிலையில்‌ பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர்‌ பாதிப்பு விவரங்கள்‌ முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500/- இழப்பீடாக வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின்‌  உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லியோ ட்ரெய்லர் : “A History of Violence” ரீமேக்.. என்ன லோகேஷ் இது?

”இளைஞர்கள் சமஸ்கிருதம் படிக்க வள்ளலார் விரும்பினார்”: மோடி பேச்சால் சர்ச்சை!

+1
1
+1
0
+1
0
+1
6
+1
2
+1
0
+1
1

2 thoughts on “வாடிய பயிர்கள்… விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு!

  1. Inga nagapattinam thirumarugal block kanglancheri village ku last year crop loss athigam ana zero potrukanga insurance ae correctah mathipidala ithula nivaranam vera apadiyae kuduthu kilichiduvanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *