நரிக்குறவரின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வோம்: ஸ்டாலின்

தமிழகம்

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை எஸ். டி பட்டியலில் இணைக்கும் மசோதாவிற்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (டிசம்பர் 15) நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (டிசம்பர் 16) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதற்காக நான் ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

எங்களின் தொடர் முயற்சியின் விளைவாக மக்களவையில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறேன். சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்

மோனிஷா

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – வசூல் ரிப்போர்ட்!

மதுவந்தியின் ஏலம் போன வீடு: பொருட்களை மீட்டுத்தர புகார்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *