மிக்ஜாம் புயல்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தமிழகம்

சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 5) ஆய்வு செய்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சென்ட்ரல், பெரியமேடு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உணவு வழங்கினார்.

பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயலலிதா நினைவு தினம்: காவல்துறை கட்டுப்பாடு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *