சென்னை கே.கே நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மைய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 28) திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கக்கூடிய மருத்துவமனைகள் தொடர்ச்சியாக தரம் உயர்த்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சென்னை கே.கே.நகர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ரூ.28 கோடி மதிப்பீட்டில் புனர்வாழ்வு ஒப்புயர்வு மைய கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த புனர்வாழ்வு மைய மருத்துவமனையில் வாதம், பக்கவாதம், முடக்கு வாதம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
ஏகே62 படத்திலிருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? – குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!