தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசிற்கும் ரெனால்ட் நிசான் நிறுவனத்திற்கும் இடையே இன்று (பிப்ரவரி 13) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தெற்கு ஆசியாவில் தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசிற்கும் நிசான் நிறுவனத்திற்குமான ரூ.3,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக, ஒரகடத்தில் இயங்கிவரக்கூடிய ரெனால்ட் நிசான் நிறுவனம் விரிவுப்படுத்தப்பட்டு 2,200 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டில் ரெனால்ட் நிசான் நிறுவனம் தனது மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
செல்வம்
சர்வதேச விமான கண்காட்சி: சாகசங்களை கண்டு ரசித்த பிரதமர்!
சிக்கிம்: அதிகாலையில் நிலநடுக்கம்!