“நவீன மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்”- முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்

கல்வியும் மருத்துவமும் சேவை துறைகள். நவீன மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 29) சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “காது கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காக்லியர் அறுவை சிகிச்சையை இலவசமாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தான் காரணமாக அமைந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் அறுவை சிகிச்சை குறித்து தெளிவாக எடுத்து கூறி நடைமுறைப்படுத்த வைத்தார். இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 4,681 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ மாநாடுகளில் உலக புகழ்பெற்ற பொன்மொழிகளை அச்சிட்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய டாக்டர் மோகன் காமேஸ்வரன் உலக பொதுமறையாக திருக்குறளை அச்சிட்டிருக்கிறார்.

செவித்திறன் குறைபாடும், வாய் பேசாமல் இருப்பது போன்ற குறைபாடுகள் நம்முடைய பிறப்பிற்கு பிறகு வருபவை தான். குழந்தைகளுக்கு காது கேளாமை அதிகரித்து வருகிறது. இது மரபுவழி பிரச்சனை என்று சொல்லப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைதலும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. எங்களைப் போன்ற அரசியல் வாதிகளுக்கு தொண்டை மிகவும் முக்கியமானது. தொண்டை இல்லையென்றால் தொண்டே போய்விடும். காது மூக்கு தொண்டை ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பிரச்சனைகள்.

இது அனைவருக்குமான பிரச்சனை என்பதால், தாய் மொழியில் இந்த மாநாடு நடைபெறுவது பொருத்தமாக உள்ளது. நவீன மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கல்வியும் மருத்துவமும் சேவை துறைகள். உலகின் திறமையான மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளனர்.” என்றார்.

செல்வம்

திருப்பதி : கோலாகலமாக நடந்த ரத சப்தமி விழா!

முட்டை மீது யோகா: உலக சாதனை படைத்த சகோதரிகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *