உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணைய கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர் 16) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

“வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

உயிரியல் பூங்காக்கள் வன விலங்கு பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

தமிழக வனத் துறையானது பூங்கா மேம்பாட்டிற்காகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இயற்கை வளங்களின் சிறந்த மற்றும் அதிகபட்ச பயன்பாட்டை ஒருங்கிணைத்து மத்திய உயிரியல் பூங்கா அமைய விதிகளின் படி நீண்ட கால திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும்.

உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஆரோக்கியமான சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மேலாண்மை நடைமுறைகள், திறந்த பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உலகெங்கும் உள்ள சிறந்த நடைமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பரிமாற்ற திட்டங்களை வகுக்க வேண்டும்.

உயிரியல் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவது மட்டுமின்றி வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

உயிரியல் பூங்காவானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து சாய்தள பாதைகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓய்வறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான வாகனங்கள், தகவல் சாதனங்கள் ஆகிய வசதிகளை உருவாக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”என்று தெரிவித்தார்.

வளமான எதிர்காலத்திற்கு காடுகள் அவசியம், காடுகள் வளம்பெற வன விலங்குகள் அவசியம். வன உயிரின பாதுகாப்பில் தமிழகத்தை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வன உயிரின வளமை மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மோடி – ரிஷி சுனக் சந்திப்பு: இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0