புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கலைஞர், அண்ணா நினைவிடங்களுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 1) மரியாதை செலுத்தினார்.
உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு பரிசாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இன்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர், அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கலைஞர் நினைவிட கட்டுமான பணிகளை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, எ.வ.வேலு, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?
தமிழகம், புதுவையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!