அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை!
சட்ட மேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் தினம் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது.
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் சமூக வலைத்தளப்பக்கங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலினுடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் தினம் சமத்துவ தினமாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மோனிஷா
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!
கார்த்தி படத்தில் கீர்த்தி ஷெட்டி