சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைத்து கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டினார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற புனரமைக்கும் பணி காரணமாக அங்கு ஐபிஎல் உட்பட எந்த சர்வதேச போட்டிகளும் நடைபெறவில்லை.
இந்நிலையில் சுமார் ரூ.140 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 5000 கூடுதல் இருக்கைகளுடன் கூடிய புதிய ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
அதனை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியனுக்கு கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் (Kalaingar M.Karunanithi Stand) என பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் அசோக் சிகாமணி, அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன் மற்றும் பிரோவோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
அனல் பறந்த இந்திய பந்துவீச்சில் சுருண்டது ஆஸ்திரேலியா
சட்டை பட்டனை கழட்டிவிட்டு சல்யூட்: உதயநிதியை தாக்கும் ஜெயக்குமார்