mk stalin open madurai kalaignar library

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்: முதல்வர் திறந்து வைத்தார்!

தமிழகம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 15) திறந்து வைத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மதுரை – புதுநத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்திற்கு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கலைஞர் நூலகம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கவனித்து கண்காணித்து வந்தார்.

கலைஞர் நூலகத்திற்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் தமிழ், ஆங்கில புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் புத்தகங்கள், கலைஞர் எழுதிய புத்தகங்கள் என 3.3 லட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. ரூ.215 கோடி செலவில் 7 தளங்களுடன் 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்தநாளான இன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நூலகத்தின் நுழைவு வாயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செல்வம்

“மதுரை ஐடி பூங்கா தென்மாவட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” – ஸ்டாலின்

கட்டிங் எல்லாம் இனிமேல் வேண்டாம்…ரோபோ சங்கரிடம் உடல் நலம் விசாரித்த கமல்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *