தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் இன்று (ஜூலை 22) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். 12 நாட்களுக்கு முன்பு ஜூலை 9ஆம் தேதி தனது 90ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி உட்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உணவு ஒவ்வாமை காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த முத்தமிழ் பேரவை 42ஆம் ஆண்டு இசை விழாவில் கலந்துகொண்டிருந்தார். அப்போது தயாளு அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் உரையாற்றி, விருது வழங்கிய பின் அங்கிருந்து மருத்துவமனைக்கு வந்துள்ளார் மு.க.ஸ்டாலின். அங்கு மருத்துவர்களைச் சந்தித்து தயாளு அம்மாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
பிரியா
கொரிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கம்…. அரை நிர்வாணமாக அடித்து செல்லப்பட்ட பெண்கள்!