தமிழக முதல்வர் ஸ்டாலின் மீனவர்களுக்கான புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீனவர் நல மாநாடு இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 9,615 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது மீனவர்களுக்கு 10 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அவை,
1. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5000 ரூபாயிலிருந்து 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
2. மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5035 பேருக்குப் பட்டா.
3. 45,000 பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
4.தூத்துக்குடி, குமரி, நெல்லையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தப்படும்.
5. மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகள் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும்.
6. 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15,000 பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
7. மீனவர் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 205 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு.
8. 1000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
9. தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி தொடக்கம்.
10. விசைப்படகுகளுக்கான மானிய விலை டீசல் 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டராக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
பிரியா
பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் கைது!
’என்ன கிண்டல் பண்ணாலும்…’: நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து உதயநிதி