மணிப்பூர் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

Published On:

| By Selvam

mk stalin invite manipur players

மணிப்பூர் மாநிலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத சூழல் நிலவுவதால் தமிழகத்திற்கு வந்து விளையாட்டு வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அம்மாநில விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தேசிய மற்றும்‌ சர்வதேச விளையாட்டு போட்டிகளில்‌ பங்கேற்கும்‌ விளையாட்டு வீர்களுக்கு உலகத்தரம்‌ வாய்ந்த பயிற்சி வசதிகள்‌ மற்றும்‌ உள்கட்டமைப்புகளை வழங்குவதில்‌ தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு எடுத்துவரும்‌ விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால்‌, தேசிய மற்றும்‌ சர்வதேச அளவில்‌ பல்வேறு விளையாட்டுகளில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த விளையாட்டு வீரர்கள்‌ அடுத்தடுத்து வெற்றிகளைப்‌ பெற்று வருகின்றனர்‌.

விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ திறமைக்கு பெயர்‌ பெற்ற மாநிலமான மணிப்பூரில்‌ உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிருந்த கவலையுடனும்‌ வேதனையுடதும்‌ பார்க்கிறது. மணிப்பூர்‌ எப்போதும்‌ தேசிய மற்றும்‌ சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண்‌ சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

கேலோ இந்தியா இளைஞர்‌ விளையாட்டுப்‌ போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்‌ ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது மணிப்பூர்‌ மாநிலத்தில்‌ ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா, இளைஞர்‌ விளையாட்டு போட்டிகள்‌ போன்ற தேசிய மற்றும்‌ சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால்‌,

அம்மாநிலத்தைச்‌ சேர்ந்த விளையாட்டு வீரர்கள்‌ வீராங்கனைகள்‌ தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள்‌ பெறுவதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்யுமாறு இளைஞர்‌ நலன்‌ மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளேன்‌.

இவ்விளையாட்டு வீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறையின்‌ சார்பில்‌ உயர் தர பயிற்சிகள்‌ அளிக்க அனைத்து ஏற்பாடுகளும்‌ செய்து தரப்படும்‌ என உதயநிதி ஸ்டாலின்‌ உறுதியளித்துள்ளார்‌.

மணிப்பூர்‌ மாநிலத்தைச்‌ சேர்ந்த விளையாட்டு வீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகளை பயன்படுத்திக்‌ கொள்ள அவர்களின்‌ விவரங்களை அதாவது தங்கள்‌ பெயர்‌, முகவரி, அடையாளச்‌ சான்று, தொடர்பு விவரங்கள்‌, விளையாட்டு சாதனைகள்‌ மற்றும்‌ பயிற்சித்‌ தேவைகள்‌ போன்ற விவரங்களுடன்‌ மின்னஞ்சல்‌ sportstn2023@gmail.com  முகவரியில்‌ மற்றும்‌ தொலைபேசி 8925903047 ஆகியவற்றில்‌ தொடர்பு கொள்ளலாம்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

“மணிப்பூர் பற்றி ஸ்டாலின் பேசுவது வேடிக்கை” – அண்ணாமலை

“லாக் டவுன் டைரி” டிரெய்லர்: ஸ்பெஷல் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.