சென்னை லலித் கலா அகாடமியில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட காலத்தால் கரையாத காட்சிகள் என்னும் புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 10) துவக்கி வைத்தார்.
இந்த புகைப்பட கண்காட்சியில் கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கலைஞர் முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்,
மலக்குழியில் இறங்கி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் புகைப்படம் என வரலாற்று நிகழ்வுகளையும், மக்களுடைய பிரச்சனைகளை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.
புகைப்பட கலைஞர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு புகைப்படங்கள் எந்த சூழலில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
தொடங்குகிறது மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான்
1600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த யாஹூ நிறுவனம்!