சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 13) தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் நம்ம ஊரு திருவிழா புகழ்பெற்றது. அந்தவகையில், சென்னை தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 18 இடங்களில் இந்த ஆண்டு ஜனவரி 14 முதல் 17 வரை சென்னை சங்கமம் நடைபெற உள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில், செவ்வியல் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தீவுத்திடலில் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கனிமொழி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘பொங்கலுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை’ : ஸ்டாலின்
தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் – அமித்ஷா உறுதி : டி.ஆர்.பாலு பேட்டி!