ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த நாமக்கல் போலீஸ் டீம்… பாராட்டிய ஸ்டாலின்

Published On:

| By Selvam

வடமாநில ஏடிஎம் கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 22) நேரில் சந்தித்து பாராட்டினார்.

கடந்த மாதம் கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏடிஎம்களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்தனர். ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச்செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் அருகே, கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தியும் நிற்காமல் சென்றது.

இதையடுத்து விரட்டி சென்ற போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி கொள்ளை கும்பலை பிடித்தனர். இந்த சம்பவத்தை பாராட்டி கேரள தலைமை காவல் துறை இயக்குநர் ஷேக் தர்வேஷ் சாஹிப், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதினார். அதில், நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்பவம் நடைபெற்ற 6 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்தது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த நாமக்கல் போலீஸ் டீமை, டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று சந்தித்து பாராட்டினார்.

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது, அரசு விருந்தினர் மாளிகையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமையவர்மன், முருகேசன், ராஜா, காவல் ஆய்வாளர்கள் தவமணி, ரங்கசாமி, காவல் துணை ஆய்வாளர்கள் என மொத்தம் 23 காவல் துறையினருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் இருந்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜய் மாநாடு: 2 லட்சம் சதுர அடி… 50 ஆயிரம் இருக்கைகள் .. போலீஸ் அலர்ட்!

“சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சென்னை” – எடப்பாடி சுளீர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share