கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக இன்று (மார்ச் 5) தென் மாவட்டங்களுக்கு செல்கிறார்.
இன்று காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதியம் 12.15 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அந்த கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 மாவட்டங்களின் வளர்ச்சி திட்ட பணிகள், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
பின்னர் இன்று மாலை 6 மணிக்கு சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
மார்ச் 6-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் ஆய்வு திட்டத்தில் பங்கேற்கிறார். மாலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறும் தோள் சீலை போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பங்கேற்கிறார்.
மார்ச் 7-ஆம் தேதி நாகர்கோவில் மாநகராட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடியிலிருந்து மதியம் 2 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
செல்வம்
ரஷ்யாவின் தற்கொலைப்படை தாக்குதல்… உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா: முடிவு என்ன?
ஏப்ரல் 1 முதல் ஹால்மார்க் இல்லாத நகைகள் விற்க தடை!