மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 8) உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட பெண்களுக்கு விருதுகள் வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், புத்தகங்களை பரிசாக வழங்கினார். அப்போது முதல்வருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.
செல்வம்
பாஜகவிலிருந்து அதிமுகவுக்கு கிளம்பிய அடுத்த 13 பேர்!
ஆசிரியர் டூ முதல்வர்: யார் இந்த மாணிக் சாஹா?