தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தமிழைக் காப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாய் மொழிக்காக போராடி உயர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையிலும், அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையை பாதுகாக்கும் வகையிலும் பிப்ரவரி 21-ஆம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக 1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் தேதியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தாய் மொழி தினமாக கடைபிடிக்கின்றனர்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 21) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர். உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம். தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம். தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
பாக்ஸ் ஆபிசில் ஜெயித்தது அண்ணனா தம்பியா? வசூல் ரிப்போர்ட்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!