மகாத்மா காந்தியடிகளின் 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இன்று (ஜனவரி 30) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக சென்னை கிண்டி ராஜ்பவனில் இருந்து எழும்பூர் அரசு அருங்காட்சியகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
அங்கிருந்த மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, கொள்கை, சுதந்திரப் போராட்டம், தியாகம் குறித்த,
90 அரிய புகைப்படங்கள் அடங்கிய காந்தியும் உலக அமைதியும் என்ற புகைப்படக் கண்காட்சியை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவரும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்