mk stalin going to villupuram

விழுப்புரம் மாவட்டத்திற்கு விரைந்த முதல்வர்

தமிழகம்

கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென இன்று (மே 15) விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி அருகே எக்கியார்குப்பம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 பேராக உயர்ந்துள்ளது.

இதற்கு நடவடிக்கையாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் போலீசார் குறிப்பாக புதுச்சேரியை ஒட்டிய மாவட்டங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 15) திடீர் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்குப் புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து மதியம் 12 மணியளவில் புறப்பட்ட முதல்வர் சாலை மார்க்கமாக மரக்காணம் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

மேலும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்திக்க உள்ளார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் சென்றுள்ளனர்.

முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

கள்ளச்சாராய விற்பனை: ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் கைது!

கல்லா கட்டாத ‘கஸ்டடி’: கிண்டல் செய்யும் சமந்தா ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *