தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 7) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
செவிலியர்களிடம் மன்னிப்பு கேட்ட பாலகிருஷ்ணா
“ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை”: ஜெயக்குமார்
இந்திய வரைபடம் : அக்க்ஷய் குமாருக்கு எதிர்ப்பு!