சப் இன்ஸ்பெக்டரை பாராட்டிய முதல்வர்

தமிழகம்

பழங்குடியின மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.ஐ. பரமசிவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 18)பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் பரமசிவம்.

இவர் காவல் நிலையம் அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதிக்கு நேற்று சென்றார். அங்கு பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை அறிந்து அங்கிருந்த மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “5 நாட்கள் பள்ளிகளில் முட்டையும், 2 நாட்களுக்கு பயறும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. தப்பான மூட நம்பிக்கையால் மாட்டிக்காதீங்க.

யாருக்காக உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் என்னை பார்க்கலாம். பள்ளி கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை அணுகலாம். கையெடுத்துக் கேட்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.” என பரமசிவம் உணர்ச்சி பொங்க பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்து வரும் பல்வேறு தரப்பினரும் காவல் உதவியாளர் பரமசிவத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

முதல்வர் பாராட்டு!

இது இன்றைய காலை செய்தித்தாள்களிலும் வெளியானது. இதனை படித்த முதல்வர் ஸ்டாலினும் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய எஸ்.ஐ. பரமசிவத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.

குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.

குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

stalin congrats si paramasivam for education awareness

காவலர்கள் அதிருப்தி!

அதே நேரத்தில், எஸ்.ஐ-யின் விழிப்புணர்வு செயலுக்காக பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சில நாட்களுக்கு முன்பு தன் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தையுடன் போராட்டம் நடத்திய ஓட்டேரி காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் கோதண்டபாணி குறித்து கருத்து தெரிவிக்காதது காவலர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு!

முத்தையா முரளிதரன் பயோபிக்: விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல்

+1
0
+1
1
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *