விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 15) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த மே 13-ஆம் தேதி விழுப்புரம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 22 பேரை கைது செய்துள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம், கடலூர் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
செல்வம்
கல்லா கட்டாத ‘கஸ்டடி’: கிண்டல் செய்யும் சமந்தா ரசிகர்கள்!
அடுத்தவருக்கு குறிவைத்து வெடிகுண்டு செய்த ரவுடி கவலைக்கிடம்!