கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை சரக டிஐஜியாக விஜயகுமார் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கோவை பந்தயசாலை முகாம் அலுவலகத்தில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகுமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் ஐபிஎஸ் இன்று மரணமடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சென்னையில் நாளை வேளாண் வணிகத் திருவிழா!
கனமழை: நீலகிரி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!