“திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்காக, முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி இன்று (டிசம்பர் 21) சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுதொடர்பக ஆ.இரா.வேங்கடாசலபதி கூறும்போது, “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908′ என்கிற என்னுடைய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படதற்காக முதல்வர் ஸ்டாலின் என்னை நேரில் அழைத்து வாழ்த்து கூறினார். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தவேளையில், திருநெல்வேலி எழுச்சி நிகழ்ந்த தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரு நகரங்களில் அந்த எழுச்சிக்கான எந்த நினைவு சின்னமும் இல்லை. அங்கு ஒரு நினைவு சின்னம் நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வான திருநெல்வேலி எழுச்சிக்கு தமிழக அரசு நினைவு சின்னம் அமைக்கும் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சாகித்ய அகாடமி விருதை விட இந்த அறிவிப்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேரளாவின் குப்பைக் கிடங்கா தமிழகம்? – மருத்துவக்கழிவு கொண்டுவந்த லாரி பறிமுதல்!