பூமிக்கு மேல் விளையும் காய்கறிகளும், பழங்களும் நமக்கு பல வகையில் சத்துக்களைத் தருகின்றன என்றால், பூமிக்குள்ளே விளையும் காய்கறிகளும் நமக்கு பல சத்துக்களை அளிக்கின்றன. ஒரு சிலர் பூமிக்குள்ளே விளையும் காய்கறிகளை உண்ணாமல் தவிர்த்து வருவார்கள். ஆனால் அது நல்லதல்ல. அப்படிப்பட்டவர்கள் சுவையான இந்த மிக்ஸ்டு ரூட் வெஜ் அல்வா செய்து சாப்பிடலாம். ஆரோக்கியமாக வலம் வரலாம்.
என்ன தேவை?
கேரட் – 100 கிராம்
பீட்ரூட் – 50 கிராம்
உருளைக்கிழங்கு – 50 கிராம்
பால் – 100 மில்லி (சூடானது)
சர்க்கரை – 100 கிராம்
முந்திரி – 5
திராட்சை – 1 டேபிள்ஸ்பூன் (உலர்ந்தது)
பாதாம் – 5
நெய் – 50 கிராம்
எப்படிச் செய்வது?
அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கை லேசாக வதக்கிக் கொள்ளவும். இத்துடன் சூடான பாலைச் (சரியா?) சோத்து சுமார் 10 நிமிடங்கள் வதக்கி வேக விடவும். வெந்த கலவையை மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும். தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து அது கரையும் வரை நன்கு கிளறவும். பொடியாக்கிய முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து மசித்த கலவையுடன் சேர்த்து நன்கு புரட்டவும். 5 நிமிடங்கள் வரை அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கவும். சுவையான அல்வா ரெடி.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவைத் தவிர்ப்பது நல்லதா?