வீக் எண்ட் நாளில் வழக்கத்திலிருந்து விலகி, வித்தியாசமாக என்ன சாப்பிடலாம்… பலரின் தேடலும் இதுவாகவே இருக்கும் நிலையில், இப்போது மலிவான விலையில் கிடைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கில் இந்த கட்லெட் செய்து ருசிக்கலாம். ஆரோக்கியம், சுவை என இரண்டுக்கும் உத்தரவாதம் தரும் இந்த கிழங்கு கட்லெட்.
என்ன தேவை?
உருளைக்கிழங்கு – 2
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 2
கேரட் – ஒன்று
பிரெட் கிரம்ப்ஸ் – 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீரில் கரைத்து வைத்த மைதா மாவு- 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வேகவைத்து மசித்த கிழங்குகளுடன், பொடியாக நறுக்கிய கேரட் வெங்காயத்தைச் சேர்த்து ஒன்றாகப் பிசைந்துகொள்ளவும். இதில் உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்துப் பிசையவும். கட்லெட் வடிவத்தில் மாவை உருட்டித் தட்டிக் கொள்ளவும். பிறகு தயார் செய்து வைத்துள்ள மைதாவில் முக்கி, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தட்டி வைத்த கட்லெட்டை பொரித்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.