திங்கட்கிழமை காலையில் பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் உள்ளவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த மிக்ஸ்டு நட்ஸ் மில்க். நட்ஸில், வைட்டமின் சத்துகள், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. இவை பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். நினைவாற்றலை அதிகரிக்கும். கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும்.
என்ன தேவை?
பாதாம், முந்திரி – தலா 50 கிராம்
பிஸ்தா – 25 கிராம்
ஏலக்காய் – 4
பால் (காய்ச்சி ஆறவைத்தது)
சர்க்கரை – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். இதனுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். 200 மி.லி பாலுக்கு ஒன்றரை டீஸ்பூன் நட்ஸ் பவுடர், தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் தரலாம்.
சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஸ்வீட் சாப்பிட நினைப்பவரா நீங்கள்?
கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவா பொங்கல்!