மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே குழந்தைகளையும், மூத்த பருவத்தினரையும் சளி, இருமல் தாக்கும். அதைக் கட்டுப்படுத்த இந்த மூலிகை பூரி உதவும்.
என்ன தேவை?
தூதுவளை – ஒரு கைப்பிடி
முள் முருங்கை – ஒரு கைப்பிடி
ஆடு தொடா இலை – ஒரு கைப்பிடி
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி
வரகரிசி மாவு – ஒரு கப்
பச்சரிசி மாவு – ஒரு கப்
சுக்குப்பொடி – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கீரை வகைகளை தனித்தனி இலைகளாக எடுத்து நன்கு கழுவி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்ததை ஒரு பவுலில் சேர்த்து, இத்துடன் வரகரிசி மாவு மற்றும் பச்சரிசி மாவைச் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சுக்குப்பொடி சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்ததை, சிறு சிறு பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மூலிகை பூரி தயார். அப்படியே சாப்பிடலாம்.
எலுமிச்சை – கொத்தமல்லித்தழை – காய்கறி சூப்