கிச்சன் கீர்த்தனா: புதினா ஜூஸ்
சமைத்த உணவை காலையில் எடுத்துக் கொள்ள நேரம் இல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அடுத்த வேளை உணவுக்கு முன்பாக ஆரோக்கியமான இந்த புதினா ஜூஸ் செய்து அருந்தலாம். இந்த புதினா ஜூஸ் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். செரிமான சக்தியை அதிகரிக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும்.
என்ன தேவை?
புதினா இலை – 30
வறுத்த சீரகத்தூள் – 2 சிட்டிகை
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
தேன் – 3 டீஸ்பூன்
கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
புதினா, தேன், சீரகத்தூள், மிளகுத்தூள், கறுப்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையில் மீதமுள்ள தண்ணீர் சேர்த்து, விருப்பப்பட்டால் ஐஸ்கட்டிகள் போட்டுப் பருகவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மாதுளை லஸ்ஸி
கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் சாதம்