சென்னை அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் மைனர் சிறுமி கடுமையாக கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூரை சேர்ந்த அந்த சிறுமி பழைய வாகனங்களை வாங்கி விற்கும் முகமது நிஷாத் மற்றும் நசியா தம்பதி வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக அவர் அங்கே பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். தீபாவளி , பொங்கலுக்கு கூட விடுமுறை தராமல் கொடுமை செய்துள்ளனர். பட்டினி போட்டதால், வீட்டில் மகனுக்கு வைத்திருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டுள்ளார். இதனால், அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர். தீபாவளியன்று சிறுமியை கொன்று குளியலறையில் போட்டுவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி ஏற்றிவைத்திருந்துள்ளனர்.
சிறுமியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த சிறுமியிடம் உடல் முழுக்க கடுமையான காயங்கள் இருந்துள்ளன. முதுகில் காயங்கள் இருந்துள்ளன. முதுகிலும், கைகளிலும் அயர்ன் பாக்ஸ் வைத்து தேய்த்த காயங்கள் உள்ளன.
அது மட்டுமல்ல உடல் முழுக்க பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்களும் இருந்துள்ளன. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல்.. கடுமையாக வேலை வாங்கி கொடுமை செய்துள்ளனர். இரவு நேரத்தில் தூங்க கூட விடாமல் கடுமையாக கொடுமை செய்துள்ளனர். பல நாட்கள் பட்டினி போட்டதால், சிறுமியின் குடலில் ஒரு சொட்டு பருக்கை கூட காண முடியவில்லையாம்.
மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் ஏற்பட்ட காயங்கள் அவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சிறுமியின் கால், கைகளில் தசை நார்கள் கிழிந்து போய் இருந்துள்ளது. பல நாட்களாக அவர் கொடுமை படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது, முகமது நிஷாத், நசியா தம்பதி கைதாகியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”முகுந்த் வரதராஜன் ஒரு பிராமணர் என காட்ட ஏன் பயப்படுகிறீர்கள்?” : ஒய்.ஜி.மதுவந்தி கேள்வி!
கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!