கோரமண்டல் அதிவிரைவு ரயில் விபத்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்ல உள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் நேற்று (ஜூன் 2) இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 4 பெட்டிகள் தரம் புரண்டது.
800-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நேற்று இரவு 11 மணியளவில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இன்று (ஜூன் 3) அதிகாலை 12.30 மணியளவில் 70 உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
350-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 800 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கவும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்ல உள்ளனர்.
அமைச்சர்களுடன் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவும் ஒடிசா செல்ல உள்ளது.
மோனிஷா
கோரமண்டல் ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு காவல்துறை!
மல்யுத்த வீரர்கள் போராட்டம்: ஆதரவளித்த 1983 சாம்பியன் டீம்!