சென்னை மாநகராட்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 4) ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மாநகராட்சி, பேரிடர் மேலாண்மை துறையினர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிக்ஜாம் புயல்: நாளை பொது விடுமுறை அறிவிப்பு!
மின்சாரம் எப்போது வரும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!