பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஆடிஓ-க்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதனால் பைக் டாக்ஸிகளுக்கு தடை என்ற பேச்சுக்கள் எழுந்தது. இந்தநிலையில், தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம். ஆனால், விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (டிசம்பர் 11) விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 18 சேனலுக்கு அளித்த பேட்டியில், “பைக் டாக்ஸிகளால் தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து ஆணையரிடம் நேற்று மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து விதி மீறல் இல்லாமல் பைக் டாக்ஸிகள் இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு விஷயங்களில் நாம் தனித்துவமாக இருந்தாலும், சில நேரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு என்ன தேவை இருக்கிறதோ, அதை ஒட்டி செயல்பட வேண்டியுள்ளது. பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசு, நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன் அடிப்படையில் தான் நாமும் செயல்பட முடியும்.
இப்போதைக்கு பைக் டாக்ஸிகள் இயங்கலாம். ஆனால், விதிமீறல்கள் இருக்கக்கூடாது. இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பைக்கின் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆகவே, இதையெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக தான் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹீத் லெட்ஜரின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம்!
அதானியுடன் ஜெகன் மோகன் ஒப்பந்தமா? – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விளக்கம்!