கரூர்: செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகம்

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஜூன் 13-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.

இந்தசூழலில் செந்தில் பாலாஜி ஆதரவாளரான திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் பண்ணை இல்லத்தில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையானது இன்று அதிகாலை நிறைவடைந்தது.

இந்தநிலையில் கரூர் மற்றும் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் இல்லம் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கரூர் கோவை சாலையில் உள்ள செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, சின்ன ஆண்டாள் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ், தனம் பேக்டரி ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, கோவை 80 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்துபாலன் இல்லம், கோவை நாடார் வீதியில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அருண் இல்லம் மற்றும் அவரது கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது சிஐஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎஃப் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

செல்வம்

ஹரியானா கலவரம் : நாடாளுமன்றத்தில் விவாதிக்க திருமா மனு!

இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா: சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *