பத்திரிகையாளர் ஓய்வூதியம்… நலவாரியக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

தமிழகம்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் எட்டாவது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

பத்திரிக்கையாளர் நலவாரியத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமசடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு இக்கூட்டத்தில் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும், மஜீத்தியா கமிட்டி- ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்றும், அந்நிறுவனங்களின் பரிந்துரையின் அடிப்படையில் அப்பணியாளர்களை பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்திடவும் இக்கூட்டத்தில் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், மற்றும் வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், பி.கோலப்பன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ், லெட்சுமி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

தீபாவளிக்கு முன்பு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

தீபாவளி தள்ளுபடி விலையில் லக்‌ஸூரி கார்கள்… முழு விவரம் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0