தஞ்சையில் பயிர்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு!

Published On:

| By Selvam

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 5) ஆய்வு செய்தனர்.

டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஹெக்டேர் சம்பா நெற்பயிர்கள் மழையில் சேதமடைந்தது.

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் குறித்து அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்வார்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்தார்.

மேலும், பயிர்கள் சேதம் குறித்த விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார்.

செல்வம்

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

வேலைவாய்ப்பு: அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share