அமைச்சர் பொன்முடி வீட்டின் இரும்பு லாக்கரை திறக்க முடியவில்லை என்று சாவி தயாரிப்பாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சண்முகபுரம் பகுதியில் உள்ள பொன்முடி இல்லத்திற்கு இன்று காலை அமலாக்கத்துறை சென்ற போது அவரது வீடு பூட்டியிருந்தது. பின்னர் சோதனைக்கு வந்த அதிகாரிகள் சென்னையில் பொன்முடி இல்லத்தில் சோதனை செய்து வந்த அதிகாரிகளிடம் பேசியபிறகே பொன்முடி மனைவி விசாலாட்சி ஓட்டுநர் செல்வம் வீட்டை திறந்து விட்டார். பொன்முடி வீட்டில் இருந்த பீரோ மற்றும் லாக்கர் சாவி இல்லாததால் பூட்டு தயாரிக்கும் தனபால் என்பவரை அழைத்து வந்தனர்.
இதுகுறித்து தனபால் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பூட்டு திறக்க காவலர்கள் என்னை அழைத்து வந்தனர். இரண்டு பீரோ, ஒரு இரும்பு பெட்டி லாக்கரை திறக்க சொன்னார்கள். பீரோ சாவி திறக்கப்பட்டது. இரும்பு பெட்டி லாக்கரை திறக்க முடியவில்லை. வீட்டில் 7 அதிகாரிகள் சோதனையில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
செல்வம்
பொன்முடி வீட்டுக்குள் ED அதிகாரிகள் எடுத்து சென்ற பை : திமுகவினர் வாக்குவாதம்!
அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!