வரும் அக்டோபர் 27 அன்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) அன்று செயல்படும் என இன்று (அக்டோபர் 24) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,164 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ் தலைவாஸ் அட்டகாச வெற்றி… புனே அணி மண்ணை கவ்வியது!
ஸ்லீப்பர் வந்தே பாரத்… இனி நீண்ட தூரப் பயணம் பற்றி கவலை வேண்டாம்!