தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூட்டுறவுத்துறை மீதான மானியக்கோரிக்கை இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இதில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்,
“விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்கள், சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைத்து தரப்பினரின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.1 லட்சம் கோடி கடன்கள் நடப்பு நிதி ஆண்டில் வழங்கப்படும்.
பெருகிவரும் நுகர்வு கலாச்சாரத்திற்கு ஏற்ப கூட்டுறவு சிறப்பங்காடிகள் நவீனப்படுத்தப்படும்.
கூட்டுறவின் சேவைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களை சென்றடையும் வகையில் 100 கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் உருவாக்கப்படும்.
பல்நோக்கு சேவைகள் வழங்குவதற்கு ஏதுவாக கூட்டுறவு அலுவலகக் கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும்.
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் வாரிசுகளில் அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் சுயசேவை பிரிவுடனான அலுவலக கட்டடம் வணிக வளாகத்துடன் கூடிய பல்நோக்கு கூட்டுறவு வளாகம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ!
ஜெயலலிதா மரணத்தில் கசந்த சிபிஐ இன்றைக்கு இனிக்கிறதா? – எடப்பாடிக்கு நேரு கேள்வி!