பாஜக ஆளுகின்ற குஜராத், கர்நாடகா மாநிலங்களை விட, தமிழகத்தில் ஆரஞ்சு நிற ஆவின் பால் விலை குறைவு என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 5) சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர்,
“பால் உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அவர்களின் நலன் கருதி பசும்பால் ஒரு லிட்டர் கொள்முதல் விலை ரூ.32-லிருந்து ரூ.35-ஆகவும், எருமை பால் ஒரு லிட்டர் ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் நிற ஆவின் பால் விலை மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்ட பால் ரூ.12 விலை உயர்த்தப்பட்டு ரூ.60-க்கு நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆரஞ்சு நிற பால் மற்ற மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.70-க்கு விற்பனை செய்கிறார்கள்.
பாஜக ஆளுகின்ற குஜராத், கர்நாடகா மாநிலங்களை விட தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் ரூ.10 குறைவு. ஆரஞ்சு பாலை தினமும் 11 லட்சம் பேர் வாங்கி வருகிறார்கள். பாலுக்கு கூட மத்திய அரசு ஜி.எஸ்.டி விலை நிர்ணயித்ததால் பால் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் விலை குறைவாக உள்ளது. ஆவின் பால் விலையை ரூ.3 குறைத்ததால் ரூ.270 கோடி தமிழக அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் மூழ்கி போன ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்வம்