பரந்தூர் பத்திரப் பதிவுகளில் முறைகேடா? அமைச்சர் மூர்த்தி பதில்!

தமிழகம்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் கிராமத்தில் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், அறப்போர் இயக்கம் சார்பில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்துக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.

அதில், விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி, தனியார் நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏக்கருக்கு பதிலாக, சதுர அடியில் 73 ஏக்கர் நிலத்தை பத்திரபதிவுத்துறை பதிவு செய்திருப்பதாகதாகவும், இதனால் நிலம் கையகப்படுத்தும் போது, அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

minister moorthy arappor iyakkam parandur airport allegation

அறப்போர் இயக்கம் அளித்த புகார் மனுவில் முகாந்திரம் உள்ளதாகவும், இந்த ஆவணங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் பரந்தூர்  கிராமத்தில் காஞ்சிபுரம் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2976/2020, 2977/ 2020, 2978/2020, 2979/2020 என்ற எண்கள் கொண்ட ஆவணங்களின் மூலம் பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு தனி நபர்களால் 19-3-2020 அன்று கிரய ஆவணங்கள் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பல சர்வே எண்களில் அடங்கிய சுமார் 73 ஏக்கரில் 1.17 ஏக்கர் நிலம் என கிரயம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே எண்களில் வழிகாட்டி மதிப்பு அதிக பட்சம் ஏக்கர்  ரூ 11,39,000 என உள்ள நிலையில், இந்த ஆவணங்களில் சதுர அடி ரூ.150/- என்ற மதிப்பு  ஏக்கர் ரூ 65,40,000 என அனுசரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரயம் செய்யப்பட்ட ஏக்கர் 1.17 நிலம் எந்த சர்வே எண்களில் கட்டுப்பட்டது என குறிப்பிடப்படவில்லை.

ஆகவே சென்னை விமான நிலையம் எதிர்காலத்தில் அமைக்கப்பட்டால் அரசிடமிருந்து அதிக இழப்பீட்டுத் தொகை பெறும் நோக்கில் இந்த ஆவணங்கள் பதியப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வர வலுவான முகாந்திரம் உள்ளது.

இந்த ஆவணங்கள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டு அதாவது முந்தைய ஆட்சிக் காலத்தில் எழுதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

minister moorthy arappor iyakkam parandur airport allegation

இந்த ஆவணங்களைப் பதிந்த பதிவு அலுவலர் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அதற்கு உதவிய ஓர் உயர் அலுவலர் மீது இது  தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறைக்கு ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு நிலம் கையகப்படுத்தப்படும் போது, இது போன்ற அதிக மதிப்புடைய ஆவணங்கள் பகட்டு மதிப்பு ஆவணங்கள் என வகைப்படுத்தப்பட்டு அவற்றின் மதிப்பு இழப்பீடு வழங்க அடிப்படை மதிப்பாக  எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையிலும் நில உடைமையாளர்களுக்கு உரிய மற்றும்  சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுக்கு நில எடுப்பு செய்யப்படும் இடங்களில் சரியான சந்தை மதிப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டு அக்குழுவால்  பரிந்துரைக்கப்பட்டு நில நிர்வாக ஆணையர் தலைமையில் இயங்கும் மாநில அளவிலான குழுவால் சரிபார்க்கப்பட்டு அரசால் சரியான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்கள் பாதிக்கப்படாதவாறு ஏற்ற வகையிலான  இழப்பீடு வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செல்வம்

பரந்தூர் நில மோசடி: அறப்போர் காட்டும் ஆதாரங்கள்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *