திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 16) நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள்.
அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 135 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆர்வமாக வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளைப் பெற்று சென்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மைக் டைசன் அவுட்: ஒரு டிக்கெட் விலை 17 கோடி!
உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ விபத்து… 10 பச்சிளம் குழந்தைகள் பலியான சோகம்!