வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை 3 நாட்கள் கழித்து மீட்புப் படையினர் இன்று (டிசம்பர் 20) மீட்டுள்ளனர்.
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
தென் மாவட்டங்களில் தற்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
கடந்த 3 நாட்களாக மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மீட்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநர் ஆபாஷ் குமார் உத்தரவின் பேரில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மேலும் ஏரல் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களை மீட்பு படை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மழை வெள்ள பாதிப்பு: மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஸ்டாலின் ஆய்வு!
ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ: 4 பேரிடம் டெல்லி போலீஸ் விசாரணை!