“நாங்கள் பள்ளியில் படிக்கும் போது அடுத்த மாவட்டத்திற்கு அழைத்து செல்வார்கள். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் பள்ளி மாணவர்களை துபாய்க்கு அழைத்து செல்கிறோம்” என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
துபாய் சர்வதேச கண்காட்சிக்கு செல்லும் 67 தமிழக அரசு பள்ளி மாணவர்களுடன் திருச்சி விமான நிலையத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவம்பர் 10) காலை வந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் 67 மாணவர்களை சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியை பார்ப்பதற்கும், அபுதாபி, துபாயில் உள்ள முக்கிய இடங்களைப் பார்ப்பதற்கும் அழைத்து செல்கிறோம்.
கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு விமானத்தில் செல்வது முதல்முறையாக இருக்கலாம். வெளிநாடு செல்லும் மகிழ்ச்சியை மாணவர்களது முகத்தில் பார்க்க முடிகிறது.
நாங்கள் பள்ளியில் படிக்கும் போது அடுத்த மாவட்டத்திற்கு அழைத்து செல்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் பள்ளி மாணவர்களை துபாய்க்கு அழைத்து செல்கிறோம். எப்படி அழைத்து செல்கின்றோமோ அதே போல அவர்களை பத்திரமாக அழைத்து வர வேண்டியது எங்களது கடமை.
இந்த நான்கு நாட்களுக்கு அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் தான் இருக்கப் போகின்றேன். மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த சுற்றுலாவாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

பிரதமரை சந்தித்த முதல்முறையே எங்களது மாநிலத்திற்கு புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வு தேவையில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில கல்வி திட்டக்குழு உருவாக்கி வருகிறோம். இதன் மீதான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் எங்களுக்கு இரு மொழி கொள்கையே போதும் நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
எடப்பாடியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவி நாளையுடன் காலாவதியா?